ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இஸ்ரேலைத் தாக்கினால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமென ஈரான் அதிபருக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
மேலும் எஃப்-35சி போர் விமானங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜியாவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை அமெரிக்கா விரைவுபடுத்தியுள்ளது.