கிரீஸ் தலைநகர் ஏதென்சில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் பெரும்பாலானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏதென்சில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில், அங்கு உள்ள வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.