புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில், தனது பிறந்தநாளையொட்டி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வருகைபுரிந்த அவருக்கு நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மணக்குள விநாயகரை தரிசனம் செய்த அவர், சிறிது நேரத்தில் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார்.