சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்! : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Nov 6, 2026, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்! : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுரங்க உரிமையாளர்களிடம் இருந்து ராயல்டி மீதான நிலுவைத் தொகைகளை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

அந்த வகையில், ராயல்டியை வரியாக கருத முடியாது என்றும், ஏற்கெனவே இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிரான தமிழக அரசு வழக்கில், ராயல்டியை வரியாக உச்சநீதிமன்றம் கருதியது தவறு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராயல்டி மீதான நிலுவைத் தொகையை சுரங்க உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக 9 நீதிபதிகள் அமர்வில் 8 பேர் தீர்ப்பளித்தனர்.

மேலும், கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பின்தேதியிட்டு நிலுவைத் தொகையை வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அதற்கான கோப்பில் அவர் கையொப்பம் இடவில்லை.

Tags: The state government has the power to impose taxes on mining and minerals! : Supreme Court Verdict
Share
Tweet
SendShare
Previous Post

மணக்குள விநாயகர் கோயிலில் ஆளுநர் கைலாஷ்நாதன் சுவாமி தரிசனம்!

Next Post

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்! – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

Related News

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies