நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.