இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, பிரிட்டனை சேர்ந்த நடிகையும், பாடகியுமான ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா, கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வரும் நிலையில், ஜாஸ்மின் வாலியாவும், கிரீஸில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.