கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் நான்கு மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இவர்களும், கொலை செய்யப்பட்ட பெண்ணை போன்று, பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றுபவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று இரவு நடந்தவை குறித்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கைதான சஞ்சய் ராய்க்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.