இந்திய விமானப்படையும் ராணுவமும் இணைந்து அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்றன.
இந்திய விமானப்படையும் ராணுவமும் இணைந்து ஆரோக்ய மைத்ரி ஹெல்த் கியூப் செயல்பாட்டில் துல்லியமான பாரா-ராப் எனப்படும் மலைப் பகுதக்கு கருவிகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கையை 15,000 அடி உயரத்தில் உள்ள உயரமான பகுதியில் மேற்கொண்டன.
இந்த சிக்கலான அவசர சிகிச்சை (க்யூப்ஸ் பிஹெச்ஐஎஸ்ஹெச்எம் (BHISHM -சஹ்யோக், ஹிட்டா மற்றும் மைத்ரிக்கான பாரத் ஹெல்த் இனிஷியேட்டிவ்- ஒத்துழைப்பு, ஆர்வம் மற்றும் நட்பு) திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய விமானப்படை அதிநவீன போக்குவரத்து விமானமான சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸை வானில் கொண்டு செல்லவும், துல்லியமாக பாரா-டிராப் செய்யவும் பயன்படுத்தியது. இந்திய ராணுவத்தின் பாரா பிரிகேட், அதன் செயல்பாட்டுத் திறனுக்குப் பெயர் பெற்றது.
பிஹெச்ஐஎஸ்ஹெச்எம் (BHISHM) அவசர சிகிச்சை கியூபின் வெற்றிகரமான பாரா-டிராப் மற்றும் வரிசைப்படுத்தல் ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அத்துடன் சரியான நேரத்தில் பயனுள்ள உதவியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது..