மதுரையில் மொத்த விற்பனை குளிர்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னையில் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானத்தை அருந்திய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மதுரையில் உள்ள குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 32 லிட்டர் காலாவதியான குளிர்பானத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 மொத்த விற்பனை கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.