தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் மூன்றாம் நாளில் பளு தூக்குதல், ஆணழகன் போட்டி மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆணழகன் போட்டியில் பங்கேற்றவர்கள் தங்களது உடல் வலிமை, கட்டுடலை காண்பித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விதவிதமான கோலங்களிட்டு அசத்தினர்.