இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகவுள்ளது.
பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.
படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் , சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அண்மையில் தயாரிப்பாளர் பூஷன் குமார் யுவராஜை சந்தித்தது தொடர்பான படங்கள் வைரலாகி வருகிறது.