அமெரிக்காவுக்கு வாழ்நாள் சேவை ஆற்றிய அதிபர் ஜோ பைடனுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்று பேசிய கமலா ஹரிஸ், ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், வாழ்நாள் சேவைக்கும் நன்றி தெரிவித்துளளார்.
எப்போது நாம் போராடுகிறோமோ, அப்போது நாம் வெற்றி பெறுவோம் என்பதை நினைவில் கொள்வோம் என்றும் அவர் கூறினார்.