காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் முன்னாள் பிரதமர் தேவகவுடா திருச்சி வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற அவர் மூலவர் பெரிய பெருமாள், தாயார் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்ட மக்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறினார்.
காவிரி பிரச்சனை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் என்றும், அந்த நாள் விரைவில் வரும் எனவும் கூறிய தேவகவுடா, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.