தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பறக்கும் போது பார்ப்பேன் என அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, எதிர்பார்ப்பது எல்லாவற்றையும் கொடுக்க முடியுமா என்றும், எதிர்பார்க்காததையும் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது விஜய்யின் கட்சிக் கொடியை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பறக்கும் போது பார்ப்பேன் என கிண்டலாக பதிலளித்தார்.