தமிழக அரசியலில் இன்னும் நிறைய தலைவர்கள் தேவை! - தமிழிசை சௌந்தரராஜன்
Sep 10, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசியலில் இன்னும் நிறைய தலைவர்கள் தேவை! – தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தன் மீதும், கட்சி கொடி மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை, நடிகர் விஜய் பக்குவமாக எடுத்துக்கொண்டு, தமிழக மக்களுக்கு சேவை செய்யவேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். பாஜகவின் முதல் உறுப்பினராக பாரத பிரதமர் இணைய உள்ளார். ஏற்கனவே இந்தியா அளவில் 11 கோடி உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர். தமிழகத்தில் 41 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது.

ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை விட இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் ஆரோக்கியமான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்வார்கள். அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.

எப்படி நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்திருக்கிறோமோ அதே போன்று தம்பி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது பாடலை அறிமுகப்படுத்தியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

வருங்காலத்தில் அவர் எத்தகைய அரசியலை முன்னெடுத்துச் செல்லப் போகிறார், எப்படி தனது தொண்டர்களை வழிநடத்த போகிறார் என்பதெல்லாம் பார்த்துவிட்டு தான் அவரது அரசியல் கட்சியைப் பற்றி நாம் கருத்து சொல்ல முடியும்.

எது எப்படி இருந்தாலும் புதிய தலைவராக உருவாகி இருக்கிறார் என்ற வகையில் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தலைவர் உருவாகி வருகிறார் என்று முறையில் அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சையாக கொடியேற்றினார், விமர்சனங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கொடி ஏற ஏற விமர்சனங்களும் ஏறியிருக்கிறது. இது ஆரோக்கியமான சூழல்தான். விமர்சனங்கள் இல்லை என்றால் கட்சி வளர முடியாது.

யானை மீதும் வாகை மலரின் மீதும் விமர்சனங்கள் வந்திருக்கிறது. யானையை பயன்படுத்தியதன் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

விஜயின் கட்சிக்கொடியில் வாகை மலர்தான் இருந்தது தாமரை மலர் இல்லை. தாமரை மலர் இருந்திருந்தால் நாங்களும் எங்களது கருத்துக்களை பதிவு செய்திருப்போம்.

அது வாகை மலரா அல்லது தூங்குமூஞ்சி மலரா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதம் நடைபெறுகிறது.

ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து கொள்கை அறிவித்த பிறகு விவாதங்கள் வரலாம். ஆனால் கொடியில் இருக்கும் பூ வாகை மலரா அல்லது தூங்குமூஞ்சி மலரா, யானையை போட்டாது சரியா?,  இல்லையா? என்று விவாதம் நடக்கிறது.

குங்குமமும் மஞ்சளும் போல எப்படியோ கொடி மங்களகரமாக உள்ளது.

பாஜகவை சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது சுதந்திர போராட்டமான எமர்ஜென்சிலும் அதிகமான கைதானவர்கள் பாஜகவைச் சார்ந்தவர்கள் தான்.

அன்று எந்த காங்கிரசை காந்தி கலைத்து விடச் சொன்னார். அன்றிருந்த காங்கிரஸ் இல்லை என்று. இன்று இருக்கும் காங்கிரஸ் முற்றிலும் வேறானது. அன்றிருந்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக உழைத்தது. இன்று உள்ளது கோஷ்டிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஒருத்தர் கூட்டணி வேண்டும் என்று சொல்வார், ஒருத்தர் கூட்டணி வேண்டாம் என்று சொல்வார்.

ஒரு வயதான மூதாட்டி நாய்கடி சிகிச்சைக்கு ஊசி வாங்குவதற்காக அவரை கடைக்கு அனுப்பியதாக செய்தியை பார்த்தேன். மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாம் இன்று உலக முதலீடுகள் எல்லாம் இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறோம். ஆனால் ஒரு மூதாட்டியை ஊசி வாங்குவதற்காக அனுப்பும் அவல நிலை அரசாங்க மருத்துவமனையில் இருக்கிறது என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணிகள் தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் சொல்கிறார். முன்பும் தயாராக இருப்பதாக சொல்லித்தான் மக்களை தத்தளித்து விட்டார்கள்.  எனவே தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: Tamil Nadu politics needs more leaders! - Tamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் விஜய்யின் கட்சிக்கொடியை பறக்கும் போது பார்பேன்! : அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

Next Post

தேசிய விண்வெளி தினம்! : பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies