முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளை நாம் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறோம். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் பங்களிப்புகளைப் பாராட்டும் நாள் இது” என்று கூறியுள்ளார்.
விண்வெளித் துறையை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்துள்ள பிரதமர், “இந்தத் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை அரசு எடுத்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகமாக சாதனைகள் நிகழ்த்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.