ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு தலைமை மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
திருவாடானையைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், இந்த மருத்துமனையில் உள்நோயாளியாகவும், வெளிநோயாளிகவும் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு 5-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், மதியம் 12 மணி வரை இரண்டு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சிகிச்சைக்கு வருபவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.