மயிலாடுதுறை அடுத்துள்ள திருவாலங்காட்டில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
திருவாலங்காட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தயாரிக்கும் தொழிற்சாலையில், திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கலியபெருமாள், குமார் மற்றும் லட்சுமணன் ஆகிய மூன்று பேரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீயை, தீயணைப்பு துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெடி மருந்து இடிக்கும்போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.