மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில், புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் 27-ம் தேதி காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
மேலும், கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் மாற்றமின்றி இயக்கப்படும் எனவும் போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.