தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, அமரர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.
நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன். விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.