அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினா. அப்போது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டினார். விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் எண்ணற்ற  பயனடைந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி  தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

விக்சித் பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிறைய நடக்கிறது. உதாரணமாக, ஆகஸ்ட் 23 அன்று, அனைத்து நாட்டு மக்களும் முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினர்.

கடந்த ஆண்டு, இதே நாளில், சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள சிவ-சக்தி புள்ளியில் சந்திரயான்-3 தரையிறங்கியது, இந்த சாதனையை எட்டிய முதல் நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார்.

“நாட்டின் இளைஞர்களும் விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் நிறைய பயனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான கேலக்ஸியின் தலைவர்களுடனும் பிரதமர் பேசினார். அவர்களின் தொழில்நுட்பம் நாட்டுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று மோடி கேட்டார்.
Galaxeye இன் உறுப்பினரான Suyash, “Hyperloop” திட்டத்தில் அவர்கள் பங்கேற்பதையும், உலகளவில் 1,500 அணிகளில் முதல் 20 அணிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றதையும் குறிப்பிட்டு, அவர்களின் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். சாதனை படைத்த அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன்.  தற்போது அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன.
‘சிலர் தங்கள் தாத்தா அல்லது பெற்றோரிடம் அரசியல் பாரம்பரியம் இல்லாததால் அவர்களால் அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், வம்ச அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளம் தொழில் முனைவோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM Modimann ki baatPM Modi praises space sector
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : அண்ணாமலை புகழாரம்!

Next Post

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியல் : உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies