திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகைபுரிந்த பக்தர்கள், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.