தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
25.08.2024 மற்றும் 26.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.08.2024 முதல் 31.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பார்வூட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 3; வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 2; சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), நடுவட்டம் (நீலகிரி), அரூர் (தர்மபுரி), மேல் பவானி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகியது.