கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடிகம்பம் நடும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நடுக்குப்பம் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தாளை கொண்டாடும் விதமாக கொடிகம்பம் நடும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் 6 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கொடிக்கம்பம் சாய்ந்து மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.