சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
சென்னையிலேயே முதல்முறையா வில்லிவாக்கம் ஏரில 250 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான கலைகளுக்கு பேர் போன சிங்கப்பூர் கலைஞர்கள் வடிவமைப்பில் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் இந்த கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 70 பேர் நின்று, இந்த ஏரியோட அழக ரசிக்கிற மாதிரி இந்த பாலம் கட்டமைக்கபட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில் சிங்கப்பூர்ல இருக்கக்கூடிய கண்ணாடி தொங்கு பாலம் மாதிரியே இந்த பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் இந்த பலத்தை ஆய்வு செய்து தரச் சான்றிதழையும் கொடுத்து உறுதியாக உள்ளதாக அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது. .
இந்த 27.50 ஏக்கர் நிலப்பரப்புல படகு சவாரிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மாலை நேரம், ஒரு மாதிரி விண்ட் ஃப்ரீயா, குடும்பத்தோட, இல்லாட்டி உங்க விருப்பமானவர்களோட, படகு சவாரி பண்ணிட்டு ரிலாக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்…. Just imagine பண்ணுங்க…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழே, அஞ்சு மீட்டர் ஆழம் வரைக்கும் தூர்வாரி இந்த தண்ணீரை சுத்தமாக ஆக்குனதுக்கு ரீசன் கூட… படகு சவாரிக்கு தானே…..
இதுமட்டும் இல்லை, வீடியோ வடிவில் இசை நீரூற்று அதாவது water fountain ன்னு சொல்லுவாங்க, அது நவீன தொழில்நுட்பத்தோட அமையவுள்ளது. 2டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு என பல சுவாரஸ்யங்கள் இந்த ஏரியில காத்திக்கிட்டு இருக்கு…
ஏரியை சுற்றி மாலை நேரத்தில வாக்கிங் போகுற மாதிரி நடைப் பாதையும், இரண்டு வயசுல இருந்து முதல் பெரியவங்க வரைக்கும் விளையாடுற வகையில 120க்கும் மேற்பட்ட இன்டோர் கேம்ஸூம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாவும் சொல்லப்படுது.
தற்போதைக்கு மின் இணைப்பு, பிளம்பிங் ஆகிய பணிகள் இறுதி கட்டத்துல நடந்துட்டு வருது.. பொழுது போக்கு வசதிகளோட, முதல் கட்டமாக நவம்பர் மாசம் தீபாவளிக்கு இந்த peace park ah திறக்கப்பட உள்ளதாகவும், பின்னர் வாட்டர் பார்க், அவுட்டோர் கேம்ஸ் பணிகள் நிறைவடைந்த பின்னர் ஜனவரி மாசம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பாரக்கப்படுகிறது.