நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது.
தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை சாவடியை மாற்று இடத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பான இறுதி கட்டப் பணிகள் காரணமாக கடந்த 20 முதல் 25-ம் தேதி வரை தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சோதனை சாவடி பணிகள் நிறைவடைந்ததால் ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.