நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் லாரி கிளீனரை சுற்றுலா பயணி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
சோளக்காட்டியில் இருந்து மினி லாரி ஒன்று மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு காரவள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது 38 வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது லாரியை நிறுத்திய சுற்றுலா பயணிகள் லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுலா பயணி ஒருவர் லாரியின் கீளினரை தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.