ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், க்வாட் அமைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
க்வாட் அமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.