சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேவாங்கர் காலனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், லாரியில் சிக்கிய ஓட்டுநரையும் மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.