சேலத்தில் லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுத்த செய்தியாளரை அச்சுறுத்திய இரு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆட்டையாம்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகியோர், அப்பகுதியில் சென்ற கனரக வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றனர்.
இதனை செய்தியாளர் யுவராஜ் என்பவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் யுவராஜை இழுத்துச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.