தமிழகம் – கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா வரையிலான சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை இறுதி செய்யும் பணி பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஷ்வர் ராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஓசூர் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.