திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஆம்பூரில் உள்ள மின்னூர் பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே பயணம் செய்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றி லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.