நீலகிரி மாவட்டம் கூடலூரில் மது போதையில் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் பிசிவி நகரைச் சேர்ந்த சதீஷ் – உஷா தம்பதியினரின் மகன் சினோஜ். இவர், திருப்பூரில் வேலைக்கு செல்லவேண்டும் என அவரது தாயாரிடம் 500 ரூபாய் பெற்றுக்கொண்டு, மது மற்றும் கஞ்சா அடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்துள்ளார்.
மேலும், அவரது தந்தை சதீஷ், தம்பி ராகுல் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சனோஜை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர்.