கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வேம்பு என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, வேம்புவுக்கும், சிவா என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
சிவாவின் வீட்டில் வேம்பு தங்கியிருந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவா, வேம்புவை அடித்துக்கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு சிவாவை கைது செய்தனர்.