X தள முதலீட்டாளர்கள் யார்? : பட்டியலில் டிவிட்டர் EX CEO முதல் சவுதி இளவரசர் வரை!
Oct 29, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

X தள முதலீட்டாளர்கள் யார்? : பட்டியலில் டிவிட்டர் EX CEO முதல் சவுதி இளவரசர் வரை!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நடுவர் நீதிபதியின் உத்தரவின் விளைவாக ட்விட்டர் தளத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவிய முதலீட்டாளர்களின் பட்டியலை எலான் மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் முதல் 10 பணக்காரர் பட்டியலில் ஒருவரான எலான் மஸ்க் சர்ச்சைகளுக்கு சளைக்காத நபராகவே இருந்து வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் Paypal நிறுவனத்தைத் தொடங்கிய கையோடு, விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான SpaceX ஐ தொடங்கினார்.

மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிறகு அந்நிறுவனத்தைக் கைப்பற்றினார்.

டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் தளத்தை வாங்கினார். சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் தளத்தை எக்ஸ் ஹோல்டிங்ஸ் என்று நிறுவனத்தின் மூலம் வாங்கிய கையோடு எக்ஸ் என்று பெயர் மாற்றினார். மேலும் ட்விட்டரின் நீலப் பறவை சின்னத்தையும் மாற்றினார்.

2023ம் ஆண்டு, எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ஒப்பந்தங்களுக்கு ஏற்ப தங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தவில்லை என்று முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள்.

இந்த வழக்கில், அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன், X நிறுவனம் தனது அனைத்து முதலீட்டாளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், எக்ஸ் போன்ற தளத்தை யார் வைத்திருக்கிறார்கள் என்பதையும், யார் யார் இந்த தளத்தின் மூலம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள பொது மக்களுக்கு உரிமையுண்டு என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தின் முதலீட்டாளர்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஏறக்குறைய 100 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்கள் பலர் உள்ளனர். மேலும் ஒரே நபரால் கட்டுப்படுத்தப் படும் பல நிதிநிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் ட்விட்டர் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன், சவுதி இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத், ஹிப்-ஹாப் மன்னன் சீன் “டிடி” கோம்ப்ஸ், முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸ், இத்தாலிய நிதிச் சேவை நிறுவனமான யூனிபோல்சாய் எஸ்.பி.ஏ., மற்றும் 8VC, ஆகிய பெயர்கள் எகஸ் தளத்தில் முதலீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிவிக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் மஸ்க் தனிப்பட்ட முறையில் ஆதரித்து அவருடன் ஒரு நேர்காணலை நடத்திய நிலையில் இது நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Tags: Who are X site investors? : From Twitter EX CEO to Saudi Prince on the list!
ShareTweetSendShare
Previous Post

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு!

Related News

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

புற்றுநோயை குணமாக்கும் சிகிச்சை : அமெரிக்கா தயாரிக்கும் 2 சூப்பர் கம்ப்யூட்டர்கள்!

தலைநகரில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர் – FORENSIC மாணவியின் திட்டம் விசாரணையில் அம்பலம்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

குடியரசுத் துணை தலைவர் வருகை வருகையின் போது விபத்து – மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக இளைஞர் வாக்குமூலம்!

டெல்லி : கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு – சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் – சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies