தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் 64 அடியை எட்டியது.
இதனால் நீர் தேங்கும் பரப்பளவு 5 கிலோ மீட்டருக்கு பரந்து விரிவடைந்து கடல் போல காட்சியளிக்கிறது.நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து வினாடிக்கு 869 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.