X தள முதலீட்டாளர்கள் யார்? : பட்டியலில் டிவிட்டர் EX CEO முதல் சவுதி இளவரசர் வரை!
Sep 10, 2026, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

X தள முதலீட்டாளர்கள் யார்? : பட்டியலில் டிவிட்டர் EX CEO முதல் சவுதி இளவரசர் வரை!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க நடுவர் நீதிபதியின் உத்தரவின் விளைவாக ட்விட்டர் தளத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவிய முதலீட்டாளர்களின் பட்டியலை எலான் மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் முதல் 10 பணக்காரர் பட்டியலில் ஒருவரான எலான் மஸ்க் சர்ச்சைகளுக்கு சளைக்காத நபராகவே இருந்து வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் Paypal நிறுவனத்தைத் தொடங்கிய கையோடு, விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான SpaceX ஐ தொடங்கினார்.

மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிறகு அந்நிறுவனத்தைக் கைப்பற்றினார்.

டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் தளத்தை வாங்கினார். சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் தளத்தை எக்ஸ் ஹோல்டிங்ஸ் என்று நிறுவனத்தின் மூலம் வாங்கிய கையோடு எக்ஸ் என்று பெயர் மாற்றினார். மேலும் ட்விட்டரின் நீலப் பறவை சின்னத்தையும் மாற்றினார்.

2023ம் ஆண்டு, எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ஒப்பந்தங்களுக்கு ஏற்ப தங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தவில்லை என்று முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள்.

இந்த வழக்கில், அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன், X நிறுவனம் தனது அனைத்து முதலீட்டாளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், எக்ஸ் போன்ற தளத்தை யார் வைத்திருக்கிறார்கள் என்பதையும், யார் யார் இந்த தளத்தின் மூலம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள பொது மக்களுக்கு உரிமையுண்டு என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தின் முதலீட்டாளர்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஏறக்குறைய 100 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்கள் பலர் உள்ளனர். மேலும் ஒரே நபரால் கட்டுப்படுத்தப் படும் பல நிதிநிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் ட்விட்டர் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன், சவுதி இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத், ஹிப்-ஹாப் மன்னன் சீன் “டிடி” கோம்ப்ஸ், முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸ், இத்தாலிய நிதிச் சேவை நிறுவனமான யூனிபோல்சாய் எஸ்.பி.ஏ., மற்றும் 8VC, ஆகிய பெயர்கள் எகஸ் தளத்தில் முதலீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிவிக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் மஸ்க் தனிப்பட்ட முறையில் ஆதரித்து அவருடன் ஒரு நேர்காணலை நடத்திய நிலையில் இது நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Tags: Who are X site investors? : From Twitter EX CEO to Saudi Prince on the list!
Share
Tweet
SendShare
Previous Post

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies