தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் பலியாகினர்.
திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் விவசாய வேலை பணிக்காக ஆணைகுளம் நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அப்போது, வாடியூர் அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜானகி, வள்ளியம்மாள் மற்றும் பிச்சி ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய வாகனத்தில் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.