சென்னை காசிமேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மண்ணடி பகுதியை சேர்ந்த அசாருதீன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். காசிமேடு பகுதி அருகே சென்றபோது வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து அசாருதீன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.