பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாரீஸ் பாராலிம்பிக்ஸ் #Paralympics 2024 அணியினரின் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கு 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் ஒட்டு மொத்த தேசத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன. இவர்களின் வெற்றிக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.