வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில்கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 355 பேருந்துகளும். நாளை 360 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 75 பேருந்துகளும் நாளை 75 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.