ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசட் பிளஸ் உடன், ஏ.எஸ்.எல்., (அட்வான்ஸ்டு செக்யூரிட்டி லைசன்) கூடுதல் பாதுகாப்பு அளிக்கட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., முன்னாள் தலைவர் சோனியா, உள்ளிட்டோருக்கு ‘இசட் பிளஸ்’ உடன் ஏ.எஸ்.எல்., பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவே, நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு நடைமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.