உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் மீட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரப்பா ஹபூர் கிராமத்தில் கனமழை காரணமாக வனப் பகுதியிலிருந்து முதலை ஒன்று அடித்துச் செல்லப்பட்டு அங்குள்ள குளத்தை வந்தடைந்தது.
இதனால் குளத்தில் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையறிந்த வனத்துறையினர், முதலையை லாவகமாக பிடித்து, கயிறு கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.