பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி, 10மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை @AvaniLekharaவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2024 ஆம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்றதன் மூலம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள தங்களது அர்ப்பணிப்பு உணர்வானது, இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் இளம் தலைமுறையை ஊக்குவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு பதிவில், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி, 10மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மோனாவுக்கு
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த அர்ப்பணிப்பு உணர்வுமிக்க வெற்றியானது தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது என அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.