ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதை மாணவி ஒருவர் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், விடுதி வளாகத்தில் திரண்டு கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீஸார், விசாரணை நடத்தி இறுதியாண்டு பொறியியல் மாணவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.