வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது பரிந்துரைகளை அனுப்பலாம் என நாடாளுமன்றக் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், இந்த சட்ட திருத்தம் தொடர்பான தங்களது பரிந்துரைகளை பொதுமக்களும், நிபுணர்களும் 15 நாட்களில் மக்களவை செயலருக்கு தபாலிலோ அல்லது மெயில் மூலமாகவோ ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் அனுப்பலாம் என நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.