தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சென்னை சென்டிரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை, புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும், பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகின்றன.