புதிய கல்விக் கொள்கையில் கட்டாயத்திற்கு இடமில்லை என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டும் என திமுக அரசு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் இணையாமல் அதன் ஒரு அம்சமாக விளங்கிவரும் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் வேண்டும் என திமுக அரசு கேட்பது மக்களை திசைதிருப்பும் செயல் என சாடியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் இணைந்த மாநிலங்களுக்கு மட்டுமே ஸ்ரீ பள்ளிகளை வழங்க முடியும் என மத்திய அரசு கூறி இருப்பது நியாயமே என தெரிவித்துள்ள எஸ்.ஆர்.சேகர், இதனை மக்களிடம் மறைத்து புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக திமுக அரசு கூறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற எந்த மொழியையும் புதிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளை அனைத்து மாநில மாணவர்களும் கற்க புதிய கல்விக் கொள்கை வழிவகுப்பதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.