விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று சட்டப்படி பெறுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டம் அன்னூரில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, அன்னூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்தவித தடையும் இல்லாதபோது, விநாயகர் சிலையை வைத்து வழிபட காவல்துறை அனுமதி மறுப்பது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.