விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவி ஒருவர் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரை போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் சிறை தண்டனையை உறுதி செய்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை உயர்த்த உடற்கல்வி ஆசிரியர் ஒரு குருவாகவும், பெற்றோர் போலவும் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினார்
, இதேபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கடும் தண்டனைக்கு உட்படுத்த, நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்ற வேண்டிய தேவை வந்துவிட்டதாக கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்த 50 ஆயிரம் இழப்பீடு உத்தரவை 5 லட்சமாக உயர்த்தி நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.